திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம், கங்குடுபல்லே கிராமத்தை சேர்ந்த பாப்பிரெட்டி, ரேவதி. பார்வையற்ற தம்பதியான இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான கோபால்(8) பள்ளிக்கு சென்றபடி தனது பார்வை இழந்த பெற்றோர்கள், 2 சகோதரர்களை காப்பாற்ற பேட்டரி ஆட்டோவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்து வருகிறான். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த தெலுங்கு தேச கட்சி பொதுச் செயலாளரும், சந்திரபாபுவின் மகனுமான நாராலோகேஷ், கோபாலின் தந்தை பாப்பிரெட்டியிடம் போன் செய்து பேசினார். அப்போது, ‘‘தற்போது ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குகிறேன். உங்கள் பிள்ளைகள் படிப்பு செலவு, ஆட்டோ வாங்க பெற்ற கடன் தொகை ரூ.2 லட்சம் கடன் அடைக்கப்படும். பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்’’ என்றார்.