திருமழிசை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். திருமழிசை பேரூராட்சி சார்பில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி தலைமை வகித்தார். பேரூர் திமுக செயலாளர் தி.வே.முனுசாமி வரவேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பி.பிரதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு முகாமை பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், நிர்வாகிகள் உ.வடிவேல், வி.எம்.நாகதாஸ், மு.குமார், தி.கோ.செல்வம், பி.அருள், ஆர்.கருணாநிதி, மு.சுரேந்தர், கங்காதரன், எழிலரசன், இளங்கோவன், ஜான்மேத்யூ, நாகராஜ், சதீஷ், ஜெயகுரு, டி.கே.வேலு, மோகன், சீனிவாசன், வெங்கடேசன், முத்து, ஜெய், எட்டியப்பன், நவீன்குமார், வெண்ணில்குமார், தாமோதரன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>