திமுக முப்பெரும் விழா விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு

சென்னை: திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது தலைவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும். தமிழ் அறிஞர்கள், தமிழ் சமூகத்திற்கு தொண்டாற்றியவர்கள் ஆகியோர் கவுரவிக்கப்படுவார்கள். இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட்டு வந்தது. திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பின், அவரது பெயரில் பேராசிரியர் விருது வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 2021ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2021ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா விருது பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரியார் விருது மிசா பி.மதிவாணன், அண்ணா விருது-  எல்.மூக்கையா, கலைஞர் விருது- கும்மிடிப்பூண்டி கி.வேணு, பாவேந்தர் விருது-வாசுகி ரமணன், பேராசிரியர் விருது- பா.மு.முபாரக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>