மெரீனா கடற்கரையில் படகு சவாரி ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு ரூ.1 கோடி

சென்னை: பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* மதுரை, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூ.1 கோடியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும்.

*  தமிழ்நாட்டில் 10 இடங்களில் தேர்வு செய்து சாகச சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் திறந்தவெளி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

* முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல்முறையாக மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.

* சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான குழு அமைக்கப்படும்.

* கடற்கரைகளுக்கு Blue flag அங்கீகாரத்தினை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலா பல்வேறு சுற்றுலா தொழில் பங்குதாரர்ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும்.

* மெரினா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.

Related Stories:

>