×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்ட ஊராட்சி தேர்தல் அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊராட்சி தேர்தலுக்கு அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் நியமித்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சித் தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் கீழ்கண்ட மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக  நியமிக்கப்படுகிறார்கள்.  

1.வேலூர் மாநகர், வேலூர் புறநகர்: முன்னாளர் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர்).
2. காஞ்சிபுரம்: முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  கோகுல இந்திரா, காமராஜ், பென்ஜமின், ஏ.சோமசுந்தரம் (காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்).
3. திருப்பத்தூர்: முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கருப்பணன், கே.சி.வீரமணி.
4. செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு: முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, பா.வளர்மதி, மாஃபா.பாண்டியராஜன், சிட்லபாக்கம்  ராசேந்திரன்(செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்), திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர்), கே.பி.கந்தன் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர்).    
5. ராணிப்பேட்டை: முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,  பொள்ளாச்சி  ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன்.
6. திருநெல்வேலி:  முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், சுதா கே.பரமசிவன் (அதிமுக அமைப்பு செயலாளர்), இசக்கி சுப்பையா (முன்னாள் அமைச்சர்), ஏ.கே.சீனிவாசன் (அதிமுக அமைப்பு செயலாளர்), இன்பதுரை (தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்) தச்சை என்.கணேசராஜா (திருநெல்வேலி மாவட்ட  செயலாளர்).
7. விழுப்புரம்: முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், சி.வி.சண்முகம்.
8. தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு: முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மனோஜ் பாண்டியன் (அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர்), சி.கிருஷ்ணமுரளி (தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்), எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி தெற்கு மாவட்டசெயலாளர்)
9. கள்ளக்குறிச்சி: முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், இரா.குமரகுரு (கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்). ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களை சேர்ந்த, தலைமை கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Election ,Committee ,AIADMK ,Districts ,Kanchipuram ,Chengalpattu , Kanchipuram, Chengalpattu 9 District Panchayat Election AIADMK Election Working Committee Officers: EPS, OPS Joint Announcement
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...