×

அகழாய்வு பணிகள் 30ம் தேதி நிறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் தொல்லியல் துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதாவது: கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என ஏழு இடங்களில் முறையாக தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது. புதிய கற்கால இடங்களை கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு நடைபெற்று வருகிறது. அண்மையில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் வரும் 30ம் தேதி நிறைவடையும்.


Tags : Minister Gold South Government , Excavation work completed on the 30th: Minister Gold South Government Information
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...