4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு இறுதி வடிவம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறியதாவது: இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையம் குழுவின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசு தற்போது நடைமுறையில் உள்ள 29 மத்திய தொழிலாளர் நல சட்டங்களை உள்வாங்கி 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை தயாரித்து அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு சட்ட தொகுப்பிற்கும் மாநில விதிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்விதிகள் தயாரிப்பு முழுமை பெற்றபின் பொதுமக்கள் வேலை அளிப்போர் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளையும், பெற அறிக்கை வெளியிடப்படும். இவ்விதிகள் தயாரிக்கும்போது தொழிற்சங்கங்கள், வேலை அளிப்போர், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து அனைத்து வகையான அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் சட்டத் தொகுப்பு விதிகளுக்கு இறுதி வடிவம் அளிக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Related Stories:

>