×

மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குறித்த திமுக உறுப்பினர் பேச்சு எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்: பேரவையில் பரபரப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கும்பகோணம் அன்பழகன் (திமுக) பேசியதாவது:
சட்டமன்றத்தில் 2006 முதல் 2011 வரை நடைபெற்ற ஒன்றிரண்டு சம்பவங்களை குறிப்பிட்டே ஆக வேண்டும். என் கண்ணுக்கு எதிரிகளே தெரியவில்லை என்று ஆவேசமான பேச்சு, இதே மாமன்றத்தில் நடந்திருக்கிறது. இன்னொன்று, எங்கே உங்கள் தளபதி. எந்த போர் படையை அவர் தலைமையேற்று நடத்தினார். எங்கே அவர் என்று கேட்ட குரல். இதோ, இங்கு அமர்ந்திருக்கிற முதலமைச்சர் தான் அன்றைக்கு தளபதியாக இருந்தார். ஸ்டாலின், வெற்றிபெறவே முடியாது, நீங்கள் முதலமைச்சராகவே முடியாது என்று ஜோதிடம் சொன்னார். கடைசியாக என்ன சொன்னார் என்றால், வேண்டுமானால் என் தொகுதியில் போட்டியிடுங்கள்.

முதலில் என்னை (முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்) வெற்றிபெறுங்கள் என்று சொன்னார். நான் இந்த மன்றத்தில் பார்க்கிறேன், அந்த முகத்தை காணவில்லை. நீங்கள் ராயபுரத்தில் ஐட்ரீம்ஸ் மூர்த்தியை போட்டியிட வைத்தீர்கள், இதோ அவர் இங்கு இருக்கிறார்.  (அப்போது ஐட்ரீம்ஸ் மூர்த்தி எழும்பி அனைவருக்கும் வணக்கம் செலுத்தினார்.அப்போது திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்).
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே சபாநாயகர் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் 15 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, நமது உறுப்பினர் அன்பழகன், மானியக்கோரிக்கைக்கு வாருங்கள் அதுபற்றி பேசுங்கள்.மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மானியக்கோரிக்கை மீது பேசுங்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: உறுப்பினர் பேசுகின்றபோது, அவையில் நடந்த பிரச்னையை எடுத்து சொன்னார். 2017ம் ஆண்டும் அவையில் என்ன நடந்தது, என்று அவர் சொன்னால் நன்றாக இருக்கும். முதல்வர்
மு.க.ஸ்டாலின்: நானும், விவாதத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதற்காகத்தான் எங்களது உறுப்பினரை கட்டுப்படுத்த சொல்லி இருக்கிறேன். எதிர்க்கட்சி தலைவர்  அதுபற்றி பேசினால், நாங்களும் பேசத் தயாராக இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது என்ன நிகழ்வு நடந்தது என்பதையும் உறுப்பினர் சொல்ல வேண்டும் என்றுதான் இங்கு குறிப்பிட்டேன். அவைக்கு தேவையில்லாதது பற்றி பேசுவது சரியில்லை.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,Edappadi Palanisamy ,minister ,Jayakumar , Chief Minister MK Stalin's challenge to DMK member Edappadi Palanisamy on former minister Jayakumar: a stir in the assembly
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...