கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கும் வீடு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கட்டுமானத் தொழிலாளர்களின் 10ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தற்பொழுது  வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகை ரூ.1,000 லிருந்து ஆண்டுக்கு ரூ.2,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களையும், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிட, முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும். போட்டி தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகென்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டி தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்படும். இதற்காக ரூ.50 லட்சம் செலவிடப்படும்.

Related Stories:

More
>