×

மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியமில்லை: தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது.

இதுபோன்ற சூழலில் தற்போதைய செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தினாலும் தற்போது கூடுதல் அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இருப்பினும் தேர்தல் நடத்தும் முன்னேற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 31ம் தேதி, தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்கள் மற்றும் தேர்தல் முடிந்து காலியாக இருக்க கூடிய ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளில் வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் வாகனங்களில் பின்பற்றக்கூடிய நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து திருத்தப்பட்ட  திருத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்களின் சிலைகளை மூட வேண்டிய அவசியமில்லை. கட்சித் தலைவர்களின் படங்களை வெளிப்படையாக வைக்க அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, Election Rules, Publication
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...