தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைக்க முயன்றால் கடும் நடவடிக்கை!: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!!

சென்னை: தடையை மீறி விநாயகர் சிலை வைக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட்டாலோ, ஊர்வலமாக எடுத்து சென்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது தவறு என்று காவல் ஆணையர் கூறினார்.

Related Stories:

>