ஜெர்மனியில் குடியேறிய இலங்கை பெண்ணை ஏமாற்றியது ஆர்யா அல்ல!: சென்னை போலீஸ் தகவல்..!!

சென்னை: ஜெர்மனியில் குடியேறிய இலங்கை பெண்ணை நடிகர் ஆர்யா ஏமாற்றவில்லை என சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இலங்கை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிவிட்டதாக தகவல் வெளியான நிலையளி தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை காவல் ஆணையர், புகாரின் அடிப்படையிலே நடிகர் ஆர்யாவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மொபைல் எண்ணை வைத்து இடத்தை கண்டுபிடித்த போது பெண் குரலில் பேசியது தெரியவந்தது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்ததாக நடிகர் ஆர்யா எனக்கு நன்றி கூறினார் என்று சங்கர் ஜிவால் குறிப்பிட்டார்.

Related Stories: