கோலியனூர் நான்குமுனை சந்திப்பில் பல்லாங்குழி சாலை: வாகன ஓட்டிகள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனூர் நான்கு முனை சந்திப்பில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த சாலை கும்பகோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு பணியில் உள்ள சாலையாகும். ஆனால் தற்போது இந்த சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில கடந்த சில தினங்களாக பெய்த மழையால் நான்குமுனை சந்திப்பில் வாகன ஓட்டிகள் விழுப்புரம் பகுதியிலிருந்து பண்ருட்டி சாலையில் திரும்பும்போது நான்கு புறமும் உள்ள சாலையில் பள்ளம் உள்ளதை கவனிக்க முடியாத நிலையில் தவறி விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

மேலும் அருகிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எதிர்வரும் மழைகாலத்தை கருத்தில் கொண்டு இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>