இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்?.. செப். 23, 24ல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு நடப்பதாக தகவல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014ம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 முதல் 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில், 2014ம் ஆண்டு 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016ம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். கடந்த, 2017-ம் ஆண்டு 14 வெளிநாட்டு பயணங்களும், 2018-ம் ஆண்டு 23 வெளிநாட்டு பயணங்களும், 2019-ம் ஆண்டு 15 வெளிநாட்டு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். 1 முறை 35 நாடுகளுக்கும், 2 முறை 15 நாடுகளுக்கும், 3 முறை 2 நாடுகளுக்கும், 4 முறை 4 நாடுகளுக்கும், 5 முறை 3 நாடுகளுக்கும், 6 முறை 1 நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியுள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்த பிரதமர் மோடி, கொரோனா இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கான தயாரிப்புப் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஒருவேளை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால் வரும் 23, 24ஆம் தேதிகளில் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடியின் பயணம் உறுதியானால், அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் இருவரும் முதல் முறையாக நேரடியாகச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோபைடன் முதல் முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி அமெரிக்கா பயணிப்பது இதுவே முதல் முறையாகும். இணைய வழியில் நடைபெற்ற குவாட் மற்றும் ஜி7 உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில் முதல் முறையாக நேரடி கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories:

>