கொரோனா தடுப்பூசி போட விழிப்புணர்வு: குடும்பத்தினருக்கு கடிதம் எழுதிய அரசு பள்ளி மாணவர்கள்

கலவை:  கலவை அருகே கொரோனா  தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குடும்பத்தினருக்கு கடிதம் எழுதினர். ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ்,  தூய்மை நிகழ்வுகள்-2021ன் படி நேற்று சமூக விழிப்பணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு) லோகநாதன் தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவர்கள் அஞ்சல் அட்டையில் தங்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதினர்.

அதில் ‘தடுப்பூசி போடுவோம் கொரோனாவை தடுப்போம், இலவச தடுப்பூசியை இன்முகத்துடன் போட்டுக் கொள்வோம், அரசின் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்துவோம்’ என்ற விழிப்புணர்வு வாசகங்களை எழுதி இருந்தனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தங்களது முகவரிகளை அஞ்சல் அட்டையில் எழுதிய மாணவர்கள், அஞ்சலக பெட்டியில் போட்டனர்.

Related Stories:

>