×

பாராலிம்பிக்கில் அடுத்தடுத்து பதக்க மழை: ஒரே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்..!

டோக்கியோ: பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் 50மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியா வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் 50மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியா வீரர்கள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். துப்பாக்கிச்சுடுதலில் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர். முன்னதாக கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் இந்தியாவின் சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தனர். ஏற்கனவே, ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாராஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று சிங்ராஜ் அசத்தியுள்ளார். பதக்க பட்டியலில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் 34வது இடத்தில் உள்ளது.

1968ல் இருந்து 2016 வரை நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 12 பதக்கங்களை வென்றிருந்த இந்தியா, நடப்பு தொடரில் அமர்க்களமாக பதக்க வேட்டை நடத்தி அசத்தி வருகிறது.

Tags : Paralympics ,India , Consecutive medal rain at the Paralympics: Two medals for India in one match ..!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!