×

திருப்பூருக்கு வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திலேயே கொரோனா தடுப்பூசி

திருப்பூர்: திருப்பூருக்கு வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்திலேயே கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் வைத்து கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை தற்போது மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்துள்ளார். ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் ரயில் மூலம் திருப்பூர் வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் வைத்து கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும் 300 முதல் 500 வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கொரோனா 2வது அலை மேலும் அதிகமாக பரவாமல் இருப்பதற்கும் அதனை கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஜூலை 1ஆம் தேதி முதலே ரயில் மூலம் வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை என்பது கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர்கள் 2 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள். அந்த பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் என வரும் பட்சத்தில் அவர்கள் வேலைக்கு செல்லலாம் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதத்தில் மட்டும் 18,414 நபர்களுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 16,114 நபர்களுக்கும் ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 2வது அலை இன்னும் முடிவடையாத பட்சத்தில் அனைத்து தொழிலாளர்களும் தடுப்பூசியை போடும் நோக்கிலும் தற்போது ரயில் நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

திருப்பூரில் இருக்கும் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இருப்பதை தொழில் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 7 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் மூலம் வடமாநிலத்தில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் வைத்தே கொரோனா தடுப்பூசியை போடுவதற்கான ஏற்பாடுகளையும் தற்போது திருப்பூர் மாநகராட்சி செய்துள்ளது.

Tags : North State ,Thirupora , Corona vaccine
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...