×

நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை: வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் பஞ்சுக்கான 1 சதவீத  நுழைவு வரி ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பஞ்சுக்கான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும்.

 அத்துடன் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு பஞ்சு மீதான நுழைவு வரி 1% ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இதற்கான சட்டத்திருத்தம் இந்த சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Tags : Chief Minister ,MK Stalin ,Legislative Assembly , 1% cancellation of entry tax on cotton at the request of weavers: Chief Minister MK Stalin's announcement in the Legislative Assembly ..!
× RELATED புலிவெந்துலா சட்டப்பேரவை தொகுதியில்...