திசையன்விளை மனோ கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

திசையன்விளை: திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் டாக்டர் பிரேம் அரசன் ஜெயராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன் மற்றும் செவிலியர்கள் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

முகாமில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் யுகேஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் பிரேம் அரசன் ஜெயராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் யுகேஸ், இளைஞர் நல அலுவலர் சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் சந்திரசேகர், பேராசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

More
>