எல்லாபுரம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரி உதயகுமார் தலைமை தாங்கினார். எல்லாபுரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார், ஊராட்சி துணைத்தலைவர் மேனகா பிரேம்குமார், ஊராட்சி செயலாளர் பொன்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இங்கு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரபாகரன் தலைமையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல், பெரியபாளையம் கிரகபிரவேசம் நகரில் 100 நாள் வேலை செய்யும் பெண்களுக்கு ஊராட்சி தலைவர் லட்சுமி திருமலை தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் கோகிலா, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் குமரவேல், காக்கவாக்கம் ஊராட்சி தலைவர் சுமன் ஆகியோர் முன்னிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பேரூராட்சி அருகில், அண்ணாசிலை நான்கு முனை சந்திப்பு, செக்போஸ்ட் மற்றும் திருமண மண்டபம் ஆகிய 4 இடங்களில் டாக்டர் ராஜசேகர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி முன்னிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் நேற்று ஒரே நாளில் 3,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக டாக்டர் பிரபாகரன் தெரிவித்தார்.  

Related Stories:

More
>