தடையை மீறி கோஷமிட்ட 8 கல்லூரி மாணவர்கள் கைது

கீழ்ப்பாக்கம்: தடையை மீறி கோஷமிட்ட 8 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னையில் கல்லூரி மாணவர்கள் பஸ்தினம் கொண்டாடவும் பஸ்சில் ஊர்வலமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று திருவேற்காடில் இருந்து பிராட்வே சென்ற பேருந்தில் 8 மாணவர்கள் பஸ்சில் பாட்டுப்பாடி ஆட்டமாடி பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டனர். அவர்களை அமைந்தக்கரை டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது டிபி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories:

More
>