தாம்பரத்தில் உலகத்தர விளையாட்டு மைதானம்

சென்னை:  விளையாட்டு மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தில் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசியதாவது: சென்னை புறநகரான  தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம், செம்பாக்கம், மாடம்பாக்கம்,  பெருங்களத்தூர் புதிதாக மாநகராட்சியாக இணைக்கப்பட்ட பகுதியில் பெரிய  விளையாட்டு மைதானமோ, நீச்சல் குளமோ  இல்லை. எனவே நேரு விளையாட்டு மைதானம்  போன்று பெரிய அளவில் உலகத்தரம் வாய்ந்த ஒரு விளையாட்டு மைதானம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் மெய்யநாதன்:  நிதிநிலை அறிக்கையில் 234 தொகுதியிலும் தலா ரூ.3 கோடியில் உள் விளையாட்டு  மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தாம்பரம் பகுதியில்  7 ஏக்கர் இடம் இருப்பதாக சொன்னார். தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்துக்கு  அந்த இடத்தை வழங்கினால் கண்டிப்பாக விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.  சென்னை புறநகர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம்  அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Related Stories:

More
>