சென்னையில் பாய்மர படகோட்டுதல் போட்டி மையம்

ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாகா பாய்மர படகோட்டுதல் போட்டி இருப்பதால், சென்னையில் பாய்மர படகோட்டுதல் அகாதமி மற்றும் பாய் படகோட்டுதலுக்கான முதன்மை நிலை மையம் அமைக்க அரசு ரூ.7 கோடி வழங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் 1087 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளதும் சாதகமான சூழலாக இருக்கிறது. அதேபோல், கெனோயிங் மற்றும் கயாக்கிங் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்புள்ள நீர் விளையாட்டுகள் என்பதால், இந்த விளையாட்டுகளை மேம்படுத்த  மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வளாகத்தில் அருகில் கெனாயிங் மற்றும் கயாக்கிங்கிற்கான முதன்மை நிலை மையம் அமைக்க அரசால் ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Related Stories:

>