உடைந்த பைப்கள் சரிசெய்யப்பட்டு சீரான குடிநீர் விநியோகம்: அமைச்சர்கே.என்.நேரு அறிவிப்பு

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பண்ருட்டி தொகுதி உறுப்பினர் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) பேசுகையில், ‘‘பண்ருட்டி தொகுதியில் சுமார் 60,000 மக்கள் வசிக்கிறார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், 40 ஆண்டுக்கு முன்பு வீதிகளில் பைப் லைன் அமைத்து குடிநீர் செய்யப்பட்ட முறையும் இருந்து வருகிறது. இதனை மாற்றி அமைத்து சீரான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் தெரிவித்ததாவது: ‘தமிழகத்தில் 121 நகராட்சிகளில் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பைப் லைன், குடிநீர் இணைப்பு எல்லாம் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அதை கணக்கெடுத்து கொண்டிருக்கிறோம். எனவே, பைப் உடைந்ததால் குடிநீர் சரியாக வரவில்லை. இதுவும் கணக்கெடுத்து மாற்றி அமைத்து மக்களுக்கு நேரடியாக தண்ணீர் கொடுக்கப்படும். ஒவ்வொரு இல்லத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

Related Stories:

>