×

அமைச்சர் பொன்முடி பேச்சு ஒரு கல்லூரியை ஆரம்பிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மதுரை மேற்கு தொகுதி அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், “மதுரை மேற்கு தொகுதியில் எந்த ஒரு அரசு கல்லூரியும் இல்லை. அதனை கருத்தில் கொண்டு கூடுதலாக கல்லூரி அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், “உறுப்பினர் 10 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்து இருக்கிறார். அப்படி 10 வருடம் இருந்து தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லாதது ஆச்சரியமாக தான் இருக்கிறது. கல்லூரி ஆரம்பிப்பது சாதாரண விஷயம் இல்லை. . இதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் அரசு அறிவியல், கலை கல்லூரி வேண்டும் கேட்கிறார்கள்.

ஒரு கல்லூரி ஆரம்பிக்க ஆசிரியர்கள் போன்றவர்களை நியமிப்பதற்கு மட்டும் 34 ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப வேண்டும். ஊதியம் ஆண்டொன்று இரண்டே கால் கோடி கொடுக்க  வேண்டும். கட்டிடம் மற்றும் தளவாடங்களுக்காக ரூ.12 கோடி  செலவாகும். இந்த நிதி நெருக்கடியிலுமே 10 கல்லூரிகளை முதல்வர்  அறிவித்திருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இருக்கின்ற கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும். நிச்சயமாக உறுப்பினர்களின் கோரிக்கை எல்லாம் வரும் காலங்களில் பரிசீலித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.

Tags : Minister ,Ponmudi , Minister Ponmudi, college, is no ordinary thing
× RELATED சட்ட நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு அமைச்சர் பொன்முடி நன்றி