×

தமிழ்நாட்டிற்கு மேலும் 8,67,000 கோவிஷீல்டு வருகை

சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 8,67,000 டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசிகளை நேற்று விடுவித்தது. அந்த தடுப்பூசிகளில், 7,81,860 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 66 பார்சல்கள்  புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு, நேற்று பகல் 12.30  மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது.  அதேபோல் 85,140 டோஸ் தடுப்பூசிகள் அடங்கிய 8 பார்சல்கள் புனேவிலிருந்து இண்டிகோ விமானத்தில் ஏற்றப்பட்டு நேற்று மாலை 3.10 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த 8,67,000 டோஸ்கள் அடங்கிய 74 பார்சல்களையும் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


Tags : Govshield ,Tamil Nadu , Tamil Nadu, Govshield, Visit
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...