போர் விமானத்தில் இருந்து ஏவக்கூடிய அதிநவீன டிரோன்கள் தயாரிக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்: பாதுகாப்பு ஒத்துழைப்பில் மேம்பாடு

புதுடெல்லி: போர்விமானத்தில் இருந்து ஏவக்கூடிய அதிநவீன ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா-அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளன.பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் நடவடிக்கையின் கீழ், இந்தியா-அமெரிக்கா இடையேயான ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே வலுப்பெற்று வருகிறது. இதன் அடிப்படையில், இந்தியாவை தனது முக்கியமான ராணுவ வர்த்தக கூட்டாளியாக அங்கீகரித்து கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது.  இரு நாடுகளின் ராணுவமும் தங்களது விமான தளத்தை பயன்படுத்தி கொள்ளும் தளவாட பரிமாற்ற உடன்படிக்கை ஒப்பந்தம், உயர் ராணுவ தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு பகிர்ந்து கொள்ளும் தகவல்தொடர்பு பாதுகாப்பு ஒப்பந்தம் என இரு நாடுகளும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இந்நிலையில், வான் பாதுகாப்பு அமைப்பு கூட்டு செயற் குழு திட்டத்தின் கீழ் திட்ட ஒப்பந்தம் கடந்த ஜூலை 30ம் தேதி கையெழுத்தானது. பாதுகாப்பு உபகரணத்தை கூட்டாக உருவாக்குவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டுறவை வலுப்படுத்த இந்த ஒப்பந்தத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், நிலம், கடல், வான்வெளி மற்றும் விமானம் தாங்கி போர்க் கப்பல்களுக்கான தொழில்நுட்பங்கள், பரஸ்பர ஒப்பந்த திட்டங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.  விமானத்தில் இருந்து, ஆளில்லா போர் விமானத்தை இணைந்து தயாரிப்பதற்கான திட்ட ஒப்பந்தம் இதன் மிக முக்கியமான சாதனை ஆகும். இத்திட்டத்தின் கீழ், ஆளில்லா போர் விமானத்தின் மாதிரியை இணைந்து உருவாக்குவதில்,  இந்திய விமானப்படை ஆய்வு கூடம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை வடிவமைப்பு, உருவாக்கம், செய்முறை விளக்கம், பரிசோதனையில் கூட்டாக செயல்பட உள்ளது.  இத்திட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தியதில் டிஆர்டிஓ.வின் ஏரோநாடிக்கல் வளர்ச்சி மையம், விமானப்படை ஆய்வு மையத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் இயக்குனரகம், இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் ஆகியவை முக்கிய காரணமாக இருக்கின்றன.

Related Stories: