ரயிலில் உள்ளாடையுடன் உலா வந்த பீகார் எம்எல்ஏ: வைரலாகும் புகைப்படம்

புதுடெல்லி: பாட்னா - டெல்லி தேஜஸ் ராஜ்தானி ரயிலில் பயணம் செய்த ஐக்கிய ஜனதா தள எம்எல்எ அரைநிர்வாணமாக அங்கும் இங்கும் சுற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  பீகார் மாநிலம், ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல். இவர் நேற்று முன்தினம் இரவு பாட்னா-டெல்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது தனது மேலாடைகளை கழற்றிவிட்டு பனியன் மற்றும் உள்ளாடையுடன் ரயிலில் அங்கும் இங்கும் நடந்ததாக தெரிகிறது. இதனால் சகபயணிகள் அதிருப்தி அடைந்தனர்.  சிலர் இது குறித்து டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அவர் வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டார். எம்எல்ஏ அரைநிர்வாண கோலத்தில் நடந்து சென்றதை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது  வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த எம்எல்ஏ கோபால் மண்டல், ‘‘நான் ரயிலில் ஏறியவுடன் வயிறு கோளாறு காரணமாக அவசரமாக கழிவறைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.  எனவே நான் அணிந்திருந்த குர்தா மற்றும் பேண்டை கழற்றிவிட்டு இடுப்பில் டவலை கட்டுவதற்கு கூட நேரமில்லாமல் உள்ளாடையுடன்  கழிவறைக்கு விரைந்தேன். ஒரு பயணி என்னை நிறுத்தி கேள்வி எழுப்பினார்.   ஆனால் போலீசார் வந்து கேட்டபோது அந்த நபர் நான் அவரை கையை பிடித்து தள்ளியதாக தெரிவித்தார்” என்றார்.

Related Stories:

>