×

தீவிர முழு ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளது: தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் உரை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். தடுப்பூசி செலுத்தும் பணியானது தற்போது தொடங்கியுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணியானது தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
அப்போது முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தில் நேற்று ஆய்வு செய்ததாக கூறினார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் ஆய்வு நடைபெற்றது. தனியார் நிறுவனத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமம் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.
கொரோனா தொற்றை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் தடுப்பூ சி போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான விழிப்புணர்வை இன்று தமிழக அரசு முனைப்புடன் செய்து வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களையும், அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை காப்பது இந்த 2 இலக்கோடு தமிழக அரசு முழுமூச்சோடு செயல்பட்டு வருகிறது. தொற்றை தடுப்பதற்கு அந்நோய் பரவக்கூடிய சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும். அதற்காக தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பயன்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன. இதனை மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இந்த கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் ஊடங்கின் முழு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் அனைவரும் முழு ஊரடங்கின் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும். அவசியமில்லாமல் வெளியில் வரக்கூடாது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதற்காக ஏராளமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
புதிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத ஒரு சூழ்நிலையை தற்போது ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். போதுமான அளவு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன் தேவையும் போதுமான அளவு இருக்கிறது. கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் மிகமிக முக்கியம் தடுப்பூசி தான். இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 2,24,544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு போட 3.14 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி வீணாகும் விகிதம் கடந்த 2 வாரத்தில் 6 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைந்துள்ளது. உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். எனவே அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்….

The post தீவிர முழு ஊரடங்கால் பலன் கிடைத்துள்ளது: தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : CM Stalin ,Thiruvallur ,Chief Minister ,Nemam Initial Health Center ,District ,MC. G.K. Stalin ,CM ,Stalin ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...