படப்பிடிப்பில் குதிரை பலி மணிரத்னம் மீது வழக்கு

சென்னை: மணிரத்னம் 2 பாகங்களாக இயக்கி வரும் தமிழ் படம், பொன்னியின் செல்வன். இது வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்பதால், அரண்மனை மற்றும் சண்டை காட்சிகளில் ஏராளமான யானைகளும், குதிரைகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் ஒரு குதிரை பலியானதற்கு பீட்டா இந்தியா அமைப்பு மணிரத்னம் மீது புகார் அளித்தது.

இதையடுத்து ஐதராபாத் அப்துல்லபுர்மேட் காவல் நிலையத்தில் மணிரத்னம் பட தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நடந்த ஷூட்டிங்கில் ஒரு குதிரை பலியானதாக, ஆகஸ்ட் 18ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெலங்கானா மாநில விலங்குகள் நலவாரியம், ஐதராபாத் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விசாரிக்க வேண்டும் என்று இந்திய விலங்குகள் நலவாரியம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>