விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில், விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பள பிரச்னையால் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஊழியர்கள் தெரிவித்ததாவது: கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கவில்லை.  மேலும் சில காரணங்கள் சொல்லி, ஊதியப் பிடித்தமும் செய்தனர். சம்பளப் பிரச்னை சரி செய்யப்படும் வரை, போராட்டத்தில் ஈடுபடுவோம்; பணிக்குத் திரும்ப மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவிக்கையில், இந்த வேலை நிறுத்தத்தால் விமானச் சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. ஏ பிரிவு ஊழியர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. மற்ற ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள். மேலும் தலைமையிடத்தில் பேசி வேலைநிறுத்தம் வாபஸ் வாங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.டெல்லி விமான நிலையத்தில் இன்று ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி விமான நிலையத்தில், விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பள பிரச்னையால் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கவில்லை. மேலும் சில காரணங்கள் சொல்லி, ஊதியப் பிடித்தமும் செய்தனர். சம்பளப் பிரச்னை சரி செய்யப்படும் வரை, போராட்டத்தில் ஈடுபடுவோம்; பணிக்குத் திரும்ப மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,  ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவிக்கையில், இந்த வேலை நிறுத்தத்தால் விமானச் சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. ஏ பிரிவு ஊழியர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. மற்ற ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள். மேலும் தலைமையிடத்தில் பேசி வேலைநிறுத்தம் வாபஸ் வாங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Related Stories:

>