மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!

டெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணியை ஒன்றிய அரசு பாராட்டியது. இதனையடுத்து, தற்போதைய மாதத்திற்குள் 1.04 கோடி தடுப்பூசி தர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசி தமிழகத்தால் போடா முடியும்.

மக்கள் தொகை அடிப்படையில் மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டுக்குள் அனுமதி போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா எல்லையுடன் ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி என்ற இலக்கோடு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 25 புதிய ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, 2 கோடி கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட 10 கோரிக்கையை வைத்துள்ளோம்.  தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்தவும் வலியுறுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>