×

விவகாரத்தான பெண்கள் தான் குறி!: திருமணம் செய்வதாக கூறி சென்னை பெண்ணிடம் ரூ.4.50 லட்சம் சுருட்டிய நைஜீரிய கும்பல் உ.பி.யில் கைது..!!

லக்னோ: திருமண தகவல் இணையதளம் மூலம் தொடர்புகொண்டு சென்னையை சேர்ந்த பெண்ணிடம் நான்கரை லட்சம் ரூபாய் சுருட்டிய நைஜீரிய கும்பலை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் முகாமிட்டு நாடு முழுவதும் பரிசு பொருள் மோசடியில் ஈடுபட்ட இந்த கும்பல் குறித்த பின்னணி தகவல் அதிரவைக்கின்றன. சென்னையில் மட்டும் இந்த கும்பலிடம் சிக்கி ஏமாந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததை அடுத்து ஆப்ரேஷன் டி என்ற பெயரில் தனிப்படை போலீசார் வேட்டையை துவக்கி மோசடி கும்பலை கைது செய்துள்ளனர். சென்னை பெரும்பூரில் வசதியான குடும்பத்தை சேர்ந்த 45 வயது பெண் மறுமணத்துக்காக திருமண தகவல் இணையதளத்தில் வரன் தேடி உள்ளார். அதில் நெதர்லாந்தில் டாக்டராக பணியாற்றுவதாக சலீம் என்ற பெயரில் ஒரு வரனின் விவரங்கள் இருந்தன.

மேலும் விஜய் என்ற வரணும் இருந்துள்ளது. இருவரிடமும் வாட்ஸ் அப் மூலம் தொடர்புகொண்டார் பெரம்பூர் பெண். தொடர்ந்து செல்போன் அழைப்புகள் மூலம் இருவரிடமும் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அன்பு பரிசு அனுப்புவதாக பெரம்பூரை சேர்ந்த பெண்ணிடம் சலீம் கூறியுள்ளார். சிறு தினங்கள் கழித்து விமான நிலைய சரக்கு முனையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். உங்களுக்கு லாப்டாப், வைர நகைகள் உள்ளிட்ட 1 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வந்திருப்பதாக கூறிய அந்த நபர், முதலில் 50,000 ரூபாய் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். பிறகு மீதமுள்ள வரி கட்டணத்தை செலுத்திவிட்டு பரிசு பொருட்களை பெற்று செல்லுங்கள் என்று அந்த நபர் நம்பும்படி கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய பெரம்பூர் பெண், முதலில் 40,000 ரூபாயை மேற்கொண்ட நபர் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். தொடர்ந்து 4 லட்சம் ரூபாய் அந்த கணக்கில் செலுத்தியுள்ளார். இந்நிலையில் சரக்கு முனையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்ம நபர், மேலும் 2 லட்சம் ரூபாயை வங்கி கணக்கில் பணம் செலுத்துங்கள் என்று கூறவே சந்தேகமடைந்த பெரம்பூர் பெண், சென்னை மத்தியப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது திருமணம் செய்துகொள்வதாக கூறி பரிசு பொருள் அனுப்பி ஏமாற்றுவது தெரியவந்தது. இதுபோன்று சென்னை சைபர் கிராம் போலீசுக்கு ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மோசடி கும்பலை பிடிக்க ஆப்ரேஷன் டி என்ற பெயரில் தனி படைகள் அமைக்கப்பட்டன.

பெரம்பூர் பெண் பணம் செலுத்திய வங்கி கணக்கு, அவரை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் எண் ஆகியவற்றை ஆய்வு செய்த போது உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே மோசடி நபர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றிவளைத்த போது 10க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் தங்கி இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பாலிட்டர்ஸ், கிளீட்டர்ஸ் ஆகிய இருவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இவர்களிடம் இருந்து 10 ஏ.டி.எம். கார்டுகள், 15 செல்போன்கள், 4.30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : UP ,Chennai , Married, Chennai woman, Rs 4.50 lakh, Nigerian gang
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை