×

நாகர்கோவில் மாநகர பகுதியில் கல்லூரி மாணவிகளுக்கு தடுப்பூசி

நாகர்கோவில்:  நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள அனைத்து கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும் 2வது நாளாக தடுப்பூசி போடும் பணி நடந்தது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் தடுப்பூசி போடும் பணியை மாநகர் நல அதிகாரி நேற்று தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி திறந்ததையொட்டி  மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் ஹோலிகிராஸ் கல்லூரி, கோணம் அரசு கலைக்கல்லூரியில் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நாகர்கோவில்   பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, கோணம் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, ஹோலிகிராஸ் கல்லூரி, இந்து கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் தடுப்பூசி போடப்படுகிறது. பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் தடுப்பூசி போடும் பணியை மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் ெதாடங்கி வைத்தார்.  கல்லூரி முதல்வர் பத்மா, செயலாளர் ஆசிர் பாக்யசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து மாணவிகளும் தடுப்பூசி போடவேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாநகர் நல அதிகாரி மாணவிகளிடம் எடுத்து கூறினார். இது குறித்து மாநகர் நல அதிகாரி விஜயசந்திரன் கூறியது:பள்ளி, கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து கண்காணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  அனைத்து கல்லூரிகளிலும் ,எல்லா மாணவ, மாணவிகளும் தடுப்பூசி போட்டவுடன் அதற்கான  சான்று  தரவும் கல்லூரி நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளது. முதலில் மாநகரில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடமுடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து மாநகர பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு, 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் .

Tags : Nagercoil , Vaccination for college students in Nagercoil metropolitan area
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை