சென்னை மெரினா கடற்கரை ரூ.20 கோடியில் அழகுபடுத்தப்படும்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

சென்னை: சென்னை மெரினா கடற்கரை ரூ.20 கோடியில் அழகுபடுத்தப்படும்என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.2 கோடியில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ரூ.32 கோடியில் நவீனப்படுத்தப்படும் என பேரவையில் அமைச்சர் அறிவித்துள்ளார். பொங்கல், செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளன்று அரசு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அரசு, தனியார் நிலங்களில் மரம் நடும் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் மெய்ய நாதன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் மண்டலங்கள் அமைத்து வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். 2024 ஒலிம்பிக்கில் தமிழகம் சார்பில் 50 வீரர்களை அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories:

>