சுற்றுலா பயணிகள் வருகையின்றி திப்பு சுல்தான் கோட்டை வெறிச்சோடியது

பாலக்காடு : கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பாலக்காடு மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. கேரளாவில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பது பாலக்காடு திப்பு சுல்தான் கோட்டை , மலம்புழா அணை பூங்கா, மீன் பண்ணை அலங்கார குகை, பாம்புப்பண்ணை, ராக் கார்டன், போத்துண்டி அணை பூங்கா, நெல்லியாம்பதி, அட்டப்பாடி அமைதிப் பள்ளத்தாக்கு, பரம்பிக்குளம், காஞ்ஞிரப்புழா அணை பூங்கா.கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மேற்படி சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா தலங்களிலுள்ள வியாபாரிகளும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: