சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு-தண்ணீர் வீணாகும் அவலம்

சீர்காழி : சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயிலிலிருந்து நாங்கூர் செல்லும் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் பைபில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் கடலோர கிராமங்களுக்கு தண்ணீர் சரிவர செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் சாலையில் வழிந்து செல்வதால் தார் சாலை பழுது அடைந்து வருகிறது பைப்பிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறுவதால் அப்பகுதி வழியாக சாலையை கடப்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து வருகிறது. இதனால் பல்வேறு சிரமத்திற்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே உடைந்த பைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>