அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கோதண்டபுரம்-முதலைமேடு சாலை மேம்படுத்தப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கோதண்டபுரம் கிராமத்திலிருந்து முதலைமேடு செல்லும் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் கிராமத்திலிருந்து முதலைமேடு செல்லும் சாலை கடந்த 10 வருடங்களாக மேம்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.

சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக படுமோசமாக இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சென்றுவர கடும் சிரமப்படுகின்றனர். முதலைமேடு கிராமத்துக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் ஜல்லி பெயர்ந்து கிடப்பதால் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலை மேம்படுத்தப்பட்டால் விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக அமையும். எனவே கிராம மக்களின் நலன் கருதி அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>