பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய சுமித் அண்டில், தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு..!!

டெல்லி: பாரா ஒலிம்பிக்ஸில் தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்பிய சுமித் அண்டில், தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்டோருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை இல்லாத அளவாக டோக்கியோவில் அதிக பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் போட்டிகள் நிறைவடைந்த இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பி வருகின்றனர். டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் விளையாட்டில் F 64 பிரிவு ஈட்டி எரிதலில் சுமித் ஆண்டில் தங்கம் வென்றார்.

இதேபோன்று தேவேந்திர ஜஜாரியா F 46 பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இவர்களுடன் உயரம் தாண்டுதலில் வெண்கலத்தை சூடிய சரத்குமார் மற்றும் தடகள வீராங்கனை சிமின், வட்டு எரிதலில் வெள்ளி வென்ற யோகேஷ் கத்துன்யா ஆகியோரும் நாடு திரும்பினர். இவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அண்டில், தங்க பதக்கத்துடன் நாடு திரும்புவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இதேபோன்று கருத்து தெரிவித்த தேவேந்திர ஜஜாரியா, என்னை பொறுத்தவரை இந்த வரவேற்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று பெருமை கூறினார்.

Related Stories: