×

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று வரலாறு படைத்த ‘தங்க மகள்’ அவனி லெகாரா : குவியும் பாராட்டுக்கள்!!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா 2-வது பதக்கம் வென்றார். 50மீ. ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து அவனி லெகாரா வெண்கலம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் தேதி முதல் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற பாராலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில்  முந்தைய உலக சாதனையை சமன் செய்த அவனி லெகரா (19 வயது), நடப்பு தொடரில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்றதுடன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வசப்படுத்தினார்.

இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டாவது பதக்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகாரா. துப்பாக்கி சுடுதலில் ஏற்கனவே தங்கம் என்ற நிலையில் அவனி லெகாரா வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 445. 9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார் அவனி. இதன் மூலம் நடப்பு பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது.

கார் விபத்து மூலம் வாழ்க்கையே மாறிப்போனாலும், ஜெய்பூரைச் சேர்ந்த  அவனி டோக்கியோவில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.  அவர்  கடைசி நாளான செப்.5ம் தேதி  50 மீட்டர் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆகியவற்றில் பங்கேற்க உள்ளதால், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை  அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Tags : Avani Legra ,India , அவனி லெகாரா
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...