புதிய ஆசிய சாதனையுடன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள பிரவீன் குமாருக்கு எனது பாராட்டுக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியி்ல் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 18 வயதான பிரவீன் குமார், 2.7மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிரவீன் குமார் வெற்றி மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை 11 ஆக உயர்ந்துள்ளது. தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள பிரவீன் குமாருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சாதனைகளைப் படைப்பதும், முறியடிப்பதுமாக டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. புதிய ஆசிய சாதனையுடன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள பிரவீன் குமாருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளிலும் வெற்றி கைகூட வாழ்த்துகள்,எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>