×

நாமக்கல் மாவட்டத்தில் 557 மாணக்கர்களுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா !

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து,  கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில்,நோய்த்தொற்று முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு வரும் மாணக்கர்களுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 557 மாணக்கர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் நாமக்கல் அடுத்த மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்த அம்மாணவி அவரது வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டார். மேலும் அம்மாணவியுடன் பயிலும் சக மாணவ மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திலேயே வைத்து பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.  எனினும் அப்பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி செய்து சுத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியான சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Corona ,Corona Experiment ,Nomakal District , Namakkal, student, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...