போதைப்பொருள் வழக்கு - நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்

ஹைதராபாத்: போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங் அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். தெலுங்கு திரையுலக நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோருக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு கலால் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ரவிதேஜா, ராணா, தருண், தனீஷ், நந்து, நவ்தீப் உட்பட வெளிநாட்டை சேர்த்த சிலரிடம் விசாரணை நடத்தினர். கடந்த 31-ம் தேதி பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்திற்கு சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேற்று இவ்வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் உட்பட மீண்டும் பழைய பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களிடம் வரும் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அமலாக்கப்பிரிவினர், கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>