×

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில் ஓ.பி.எஸ், இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா பதில் மனு தாக்கல்

சென்னை:  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என 2017ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி, சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை 4வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சசிகலாவின் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு தாக்கல் செய்தார். வில்,அதில், கட்சியின் மற்ற விவகாரங்களில் தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 உரிமையியல்  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, வழக்கை நிராகிரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இதற்கிடையில், வழக்கிலிருந்து டி.டி.வி.தினகரன் விலகியதையடுத்து, சசிகலா திருத்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை பதில்மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சசிகலாவின் திருத்த மனு விசாரணைக்கே உகந்ததல்ல. விசாரணையை காலம் தாழ்த்த வேண்டுமென்ற நோக்கில் அவர் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், இந்த வழக்கில் கட்சியின் நிதி விவாகரங்கள் சம்மந்தப்பட்டுள்ளதாலும், வங்கிகளை எதிர்மனுதாராக சசிகலா  இணைத்துள்ளதாலும், வங்கி தரப்பை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தது.



Tags : OPS ,EPS ,AIADMK ,Sasikala , In the case of opposing the AIADMK general body meeting OBS, EPS petition to be dismissed: Sasikala reply petition filed in Licensing Court
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்,...