அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு அக்டோபரில் போட்டி தேர்வு

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அக்டோபர் மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் புதியவர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2020 ஜனவரி 22ம் தேதி முதல் தகுதியுள்ள விரிவுரையாளர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றினர்.

பிப்ரவரி 21ம் தேதி வரை இறுதி நாள் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான கணினி வழித் தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடக்கும் தேதி முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது  தமிழகத்தில் தொற்று குறைந்துள்ளதால் அக்டோபர் 28, 29 மற்றும் 30ம் தேதிகளில் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இருப்பினும் தொற்று ஏற்படும் பட்சத்தில் இந்த தேர்வு தேதியும் மாறும்  வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>