கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இருந்தபோதும் இப்போது கோரிக்கை வைப்பது சந்தோஷம்தான்: அமைச்சர் காந்தி பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சூலூர் உறுப்பினர் கந்தசாமி (அதிமுக) பேசுகையில், ‘‘சோமனூரில் ஜவுளி சந்தை அமைத்தால், அவர்களின் வருமானத்தை நேரடியாக உயர்த்த வாய்ப்பு இருக்கும். இந்த தொழிலுக்கு புத்தூயிர் ஊட்டும் வகையில் சோமனூரில் புதிதாக ஜவுளி சந்தை அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், ‘‘கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீங்க. இப்போது நீங்கள் கோரிக்கை வைக்கும்போது எனக்கு சந்தோஷம்தான். இப்போது ஒரு நம்பிக்கை வந்தாச்சு. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்ற பிறகு நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் இருக்கிறீர்கள். நிச்சயமாக செய்வோம். முதல்வரிடம் ஆலோசனை பெற்று ஜவுளி பூங்கா அமைக்க முயற்சி எடுப்போம்” என்றார்.

Related Stories:

>