முன்னாள் பாஜ எம்பி சந்தன் மித்ரா மரணம்

புதுடெல்லி: முன்னாள் மாநிலங்களவை எம்பி. சந்தன் மித்ரா உடல் நலக்குறைவால் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். முன்னாள் மாநிலங்களவை எம்பி சந்தன் மித்ரா (65). இவர் பிரபல ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து, பின்னர் அரசியலில் இணைந்தார். இவர் பாஜ சார்பில் 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு  செய்யப்பட்டார். இவர் பாஜ மூத்த தலைவர் எல்கே.அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2018ம் ஆண்டு பாஜ.வில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில்,  நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். சந்தன் மித்ரா மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>