ஜி- சோனியா, டி- திக்விஜய், பி-சிதம்பரம் ம.பி. பாஜ அமைச்சர் ஜிடிபி.க்கு புது விளக்கம்

போபால்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஜிடிபி.யின் உண்மையான பொருள் என்ன என்று தெரியவில்லை என மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஜிடிபி உயர்வு என்பதற்கு ஒன்றிய அரசு புதிய அர்த்தத்தை கொண்டு வந்துள்ளதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். ஜிடிபி என்பது கேஸ், டீசல், பெட்ரோல் விலை உயர்வதாகும் என விமர்சித்து இருந்தார். இந்நிலையில், இதற்கு மத்தியப் பிரதேச பாஜ அரசின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், ‘‘ராகுல் காந்திக்கு ஜிடிபி குறித்த உண்மையான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை. ஜி என்பது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியையும், டி என்பது ராகுலின் அரசியல் குரு திக் விஜய் சிங்கையும், பி என்பது ப.சிதம்பரத்தையும் குறிக்கிறது,’’ என்றார். மிஸ்ராவின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>