அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஒரத்தி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்பி செல்வம் திறந்து வைத்தார்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஒரத்தி கிராமத்தில் நடந்த, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, எம்பி செல்வம் திறந்து வைத்தார். விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் ஓரத்தி கிராமத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், வருவாய் பேரிடர் மேலாண்மை ஆகிய துறை சார்பில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் விழா நேற்று நடந்தது. எம்பி செல்வம் கலந்துகொண்டு, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். ஒன்றிய திமுக செயலாளர் ஒரத்தி கண்ணன், மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன், பேரூர் செயலாளர் உசேன், மாவட்ட ஆதிதிராவிட நல குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் பேக்கரி ரமேஷ், ரத்தினவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>