×

செம்பரம்பாக்கம் ஊராட்சியில் ரூ.16.24 கோடி மதிப்பில் 124 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளுர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெற்ற இலவச பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், ஒன்றிய துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தி.சரவணன், தனி வட்டாட்சியர் சுமதி, மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜி.ரவி, ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி தலைவர் சாந்தி வின்சென்ட் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு தலா 2 சென்ட் வீதம் 124 நபர்களுக்கு ரூ.16.24 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி  பேசியதாவது,  இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி கோரிக்கை மனு அளித்த 124 நபர்களுக்கு இன்றைய தினம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில், தலா 2 சென்ட் வீதம் ரூ.16.24 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. சொன்னதை செய்கின்ற அரசாகவும், சொல்லாததையும் செய்யும் அரசாகவும் நம் தமிழக அரசு திகழ்வதினால் இதுபோன்று பட்டா வழங்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் பூந்தமல்லி வட்டாட்சியர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியன், எஸ்.அமிழ்தமன்னன், துணைத் தலைவர் கன்னியம்மாள் ருத்திரகுமார், மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Sembarambakkam ,Minister ,Nasser , 16.24 crore free housing lease for 124 persons in Sembarambakkam panchayat: Minister Nasser
× RELATED பூந்தமல்லி அருகே பள்ளி வேனில்...